
சக்கர நாற்காலியில் வந்து தேசியக் கொடி ஏற்றிய ஊராட்சி மன்றத் தலைவர்!
திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக முல்லை வேந்தன் என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மணி கிராமஊராட்சி மன்றத் தலைவர் முல்லை வேந்தன் தன்னுடைய உடல் நிலையும் பொருட்படுத்தாது சக்கர நாற்காலியில் வந்து தேசியக்கொடி ஏற்றினார்.
பூம்புகார்: திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியின் தலைவராக முல்லை வேந்தன் என்பவர் இருந்து வருகிறார். சமீபத்தில் வாகன விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது. இன்று சக்கர நாற்காலியில் வந்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
இந்த சம்பவம் அங்கே கூடியிருந்த மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவர் பள்ளி மாணவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் கிராம சபை கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






