ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சோனியா காந்தியிடம் உடல் நலம் விசாரித்தார் முதல்வா் ஸ்டாலின்

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.

News image
சோனியா காந்தியிடம் உடல் நலம் விசாரித்தார் முதல்வா் ஸ்டாலின் (கோப்பிலிருந்து)
Updated On :17 ஆகஸ்ட் 2022, 11:00 am

DIN

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார்.

அரசுமுறைப் பயணமாக புது தில்லிக்கு வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் இன்று (17.8.2022) தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார்.

ஒருநாள் பயணமாக புது தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.