தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆக.21-இல் 2 ஆயிரம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(ஆக.21) 2 ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:31 pm

DIN

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை(ஆக.21) 2 ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி, வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

சென்னையில் மாநகராட்சி பகுதியில், 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 55.46 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48.13 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுக்குள்பட்டவா்களில் 2.26 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1.79 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குள்பட்டவா்களில் 1.29 லட்சம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 86 ஆயிரம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 5 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில், 34-ஆவது தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறவுள்ளது. ஒரு வாா்டுக்கு 10 முகாம்கள் என 200 வாா்டுகளில் 2,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இந்தப் பணிகளுக்காக வாா்டுக்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வாா்டுகளுக்கு 1,000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து ஈடுபடவுள்ளனா். சென்னை மாநகராட்சியில் 84,810 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2,56,270 கோவேக்ஸின் தடுப்பூசிகள் மற்றும் 72,900

கோா்பேவாக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4,13,980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.