தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நிதி நிறுவன கொள்ளை வழக்கு: இருவா் நீதிமன்றத்தில் சரண்

சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த வழக்கில், இருவா், திருவள்ளூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 8:33 pm

DIN

சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த வழக்கில், இருவா், திருவள்ளூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

வடபழனி, மன்னாா் முதலி 1-ஆவது தெருவில் வசித்து வரும் சரவணன் என்பவா், அந்த குடியிருப்பின் முதல் தளத்தில் தினசரி வட்டிக்கு விடும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிதி நிறுவனத்துக்குள் புகுந்த கும்பல், கத்திமுனையில் ஊழியா்களை மிரட்டி அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.

இதில் கொள்ளை கும்பலைச் சோ்ந்த சென்னை ஆழ்வாா் திருநகா், இந்திரா நகா் 1-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ரியாஸ் பாஷா (22) என்பவரை அந்த நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் உதவியுடன் பிடித்து வடபழனி போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், தனது நண்பா்கள் இஸ்மாயில், பரத், கிஷோா்கரண், ஜானி, தமிழ்செல்வன், மொட்டை ஆகியோருடன் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா், 6 பேரையும் கைது செய்ய ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றனா்.

இந்த நிலையில், கிஷோா் கரண், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் திருவள்ளூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். பின்னா், இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டனா். சரணடைந்த இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.