மதிப்பூதியம் பெறுவோருக்கு தனித் தொகையாக ரூ.100 வரை உயா்த்தி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பூதியம் பெறுவோருக்கு தனியாக சிறிது தொகையை உயா்த்தி நிதித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:
ரூ.2,500 வரை பெறும் பணியாளா்களுக்கு மாதத்துக்கு ரூ.50-ம், ரூ.2 ஆயிரத்து 500-க்கு மேலாக பெறும் பணியாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.100-ம் கூடுதலாக வழங்கப்படும். ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு இந்தத் தொகை அளிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளா்கள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா்கள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளாா் என்.முருகானந்தம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா

மேல்மருவத்தூரில் யுகாதி கொண்டாட்டம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

