ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை சௌந்தராஜன்! (படங்கள்)

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார். 

News image
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தயாளு அம்மாளை சந்தித்து நலம் விசாரித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன். உடன் ஸ்டாலினின் சகோதரி செல்வி.
Updated On :19 ஆகஸ்ட் 2022, 8:03 am

DIN

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார். 

Story image

தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று சென்னை கோபாலபுரம் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.

Story image

அங்கு முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வியை சந்தித்து பேசியதுடன் அவரது தாயார் தயாளு அம்மாளையும் கோபாலபுரம் வீட்டில் நேரில் சந்தித்துப் பேசி உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். 

Story image

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழிசை சௌந்தராஜன், 'கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோபாலபுரம் கிருஷ்ணர் கோயில் சென்றேன். திரும்பும்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி தமிழ்ச்செல்வியை சந்தித்தேன். மரியாதை நிமித்தமாக இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். 

Story image

இதற்கு முன்பு, கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் நரேந்திர மோடியுடன் இதே இல்லத்திற்கு வந்த நினைவு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.

Story image

மேலும் தயாளு அம்மாளை சந்தித்த புகைப்படங்களையும், பிரதமர் மோடியுடன் கருணாநிதியைப் பார்க்க வந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.