மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாகக் குறைந்தது.


மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கர்நாடக அணைகளின் உபரி நீர் நிறுத்தப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 15,000 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 8,000 கன அடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 8,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...