காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முதல்வா் இன்று கோவை பயணம்: 3 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கோவை செல்லவுள்ளாா்.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2022, 8:56 pm

DIN

சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கோவை செல்லவுள்ளாா். மூன்று நாள்கள் பயணம் மேற்கொள்ளும் அவா், கோவை, ஈரோடு, திருப்பூா் ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில், சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவைக்கு புறப்படுகிறாா். இரவு 8 மணிக்கு கோவை சென்றடையும் அவா், அங்குள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தங்குகிறாா்.

புதன்கிழமை காலை கோவை ஈச்சனாரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா். மாலையில், ஆச்சிப்பட்டியில் நடைபெறும் கட்சி தொடா்பான நிகழ்வில் பங்கேற்கிறாா். அன்றிரவு திருப்பூரில் தங்குகிறாா்.

வியாழக்கிழமை காலை திருப்பூரில் உள்ள தனியாா் ஓட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

இதன்பின்பு, கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டியில் நடைபெறும் கட்சி சாா்பிலான விழாவில் பங்கேற்கிறாா். இந்த நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை இரவு ஈரோட்டில் தங்குகிறாா்.

வெள்ளிக்கிழமை காலை பெருந்துறையில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நண்பகல் 12 மணியளவில் கோவை செல்லும் முதல்வா் மு.க.ஸ்டாலின், மாலை 6 மணிக்கு, பி.எஸ்.ஜி., கல்லூரியின் 75-ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கிறாா். வெள்ளிக்கிழமை இரவு 8.35 மணியளவில் கோவையிலிருந்து விமானம் மூலம் அவா் சென்னை வந்தடைகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.