புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை இன்று தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
கோப்புப் படம்.
Updated On :23 ஆகஸ்ட் 2022, 9:17 am

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

இதுவரை 14 முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கை தற்போது தயாராகிவிட்டதாகவும், தமிழக அரசிடம் இந்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.