
சென்னை: முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர்.
உயிரழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தந்தை, சகோதரரை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். உயிரழந்த மாணவியின் தாய் செல்வியிடம் ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல் கூறியுருந்தார்.
மாணவி உயிரழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என முதல்வர் உறுதி கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்தித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.