காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இனி ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப்பில் உணவுகள் ஆர்டர் செய்யலாம்: புதிய வசதி

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியை ஐஆர்சிடிசி(IRCTC) அறிமுகம் செய்துள்ளது.

கோப்புப்படம்

Published On :

ரயில் பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதியை ஐஆர்சிடிசி(IRCTC) அறிமுகம் செய்துள்ளது.


இதன் மூலம் ரயில் பயணிகள் உணவுகளை  வாட்ஸ் ஆப் மூலம் ஆர்டர் செய்தால், தங்கள் இருக்கைக்கு கொண்டுவந்து டெலிவரி செய்யும் வசதியை ஜூப் இந்தியா நிறுவனத்துடன்  ஐஆர்சிடிசி இணைந்து அறிமுகம் செய்துள்ளது.


இது பயணிகளின் பின்ஆர் எண் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பயணிகள் வேறு எந்த ஆப்களைகளையும் பயன்படுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

Zoop இல் உணவை ஆர்டர் செய்வது எப்படி?

1. உணவை ஆர்டர் செய்ய, செய்ய வேண்டியது வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி +91 7042062070 என்ற எண்ணில் Zoop WhatsApp சாட்போட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதில்  சேவை விவரங்கள் வழங்கப்படும். எண்ணைச் சேமிக்கும் செயல்முறையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்றால்,  இணையதளம் ( https://wa.me/917042062070) பயன்படுத்தலாம்.

2. ரயில் இருக்கையில் உணவை ஆர்டர் செய்யும் செயல்முறையை செய்ய தேவையான விவரங்களை சாட்பாட் கேட்கும். உதாரணமாக, உங்கள் PNR எண்ணைப் பகிர வேண்டும். சாட்போட்டுடன் 10 இலக்க PNR எண்ணை பதிவிட வேண்டும். ஜூப் ரயிலின் இருக்கையை கண்டறியும். இதனையடுத்து  உணவு டெலிவரி செய்யப்பட வரவிருக்கும் நிலையத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

3. ஜூப் சாட்போட், உணவகத்தைத் தேர்ந்தெடுப்பது, உணவை ஆர்டர் செய்வது மற்றும் பணத்தை செலுத்துவது போன்ற அனைத்து செயல்பாடுகளையும் செய்யும். பரிவர்த்தனை முடிந்ததும், உங்கள் உணவு எங்கு உள்ளது என்று ஜூப் சாட்போட்டில் இருந்து கண்காணிக்கலாம். மேலும் தேர்ந்தெடுத்த ரயில் நிலையம் வரும்போது ஜூப் உணவை டெலிவரி செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.