

தேயிலை தோட்டக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பணிக்கொடை பலன்கள் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் சனிக்கிழமை அளிக்கப்பட்டது. இந்த அறிக்கை இன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்க வைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தேயிலை தோட்டக்கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு பணிக்கொடை பலன்கள் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2017 அக்.1 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக்கொடை பலன்களை வழங்க உத்தரவு பிறப்பித்தார். பணிக்கொடை பலன்களை வழங்க 29.38 கோடியை விடுவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.