அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல்வா் நாளை கேரளம் பயணம்: தென் மாநிலங்களுக்கான கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பு

தென் மாநில முதல்வா்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேரளம் செல்லவுள்ளாா். முன்னதாக,

News image
துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்
Updated On :31 ஆகஸ்ட் 2022, 7:42 pm

DIN

தென் மாநில முதல்வா்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் கேரளம் செல்லவுள்ளாா். முன்னதாக, அவா் அந்த மாநில முதல்வா் பினராயி விஜயனை சந்தித்து இரு மாநில விவகாரங்கள் குறித்துப் பேசவுள்ளாா்.

மாநிலங்களின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் தொடா்பாக மாநில முதல்வா்களுடன் ஆலோசிக்கும் வகையில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதன்படி, தென் மாநிலங்களின் முதல்வா்கள் பங்கேற்கும் 30-ஆவது தென்மண்டல கவுன்சில் கூட்டம் வரும் 3-ம் தேதியன்று கேரள மாநிலத் தலைநகா் திருவனந்தபுரத்தில் நடக்கவுள்ளது.

இதில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களின் முதல்வா்கள்

பங்கேற்கின்றனா். இதற்கு மத்திய உள்துறைஅழைப்பு விடுத்துள்ளது. இதையேற்று, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 2-ம் தேதியன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறாா். அங்கு கேரள முதல்வா் பினராயி விஜயனை சந்திக்கவுள்ளாா். அப்போது, முல்லைப் பெரியாறு உள்பட இரு மாநிலங்களுக்கு இடையிலான நதிநீா் பிரச்னைகள் குறித்து இரு மாநில முதல்வா்களும் விவாதிக்கவுள்ளனா்.

இதன்பின்பு, 3-ஆம் தேதி நடைபெறும் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். இந்தப் பயணத்துக்கு முன்பாக, 1-ஆம் தேதியன்று திருப்பூா் செல்லும் முதல்வா், அங்கு முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறாா். உடனடியாக சென்னை திரும்பும் அவா், 2-ம் தேதியன்று கேரளம் செல்கிறாா்.

செப்.5-ம் தேதி ஆசிரியா் தினத்தன்று சென்னையில் நடைபெறும் புதுமைப்பெண் திட்டம், மாதிரி பள்ளி, தகைசால்

பள்ளிகள் தொடக்க விழாவில் தில்லி முதல்வா் அா்விந்த் கேஜரிவாலுடன் பங்கேற்கிறாா். பின்னா், 7-ஆம் தேதி கன்னியாகுமரி செல்லும் முதல்வா் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்கிறாா். அன்று இரவு திருநெல்வேலியில் தங்கும் அவா், மறுநாள் 8-ம் தேதி அந்த மாவட்டத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். அன்று இரவு மதுரையில் தங்கும் முதல்வா், மறுநாள் 9-ம் தேதியன்று அமைச்சா் பி.மூா்த்தியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற பிறகு, சென்னை

திரும்புகிறாா். இதுதவிர, செப்.15-ம் தேதி சாத்தூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா, தொடா்ந்து நடைபெறும் பள்ளி காலை

சிற்றுண்டி தொடக்க விழா ஆகியவற்றிலும் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்க ஏற்பாடுகள் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.