மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாருக்கு 150 கிலோ கொழுக்கட்டை

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
கொழுக்கட்டையை எடுத்துச் செல்லும் கோயில் ஊழியர்கள்
கொழுக்கட்டையை எடுத்துச் செல்லும் கோயில் ஊழியர்கள்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

வான் உயர்ந்த மலைக்கோயிலாக இருக்கும் தாயுமானசுவாமி திருக்கோயிலின் மலை உச்சியில் அருள்மிகு உச்சிப் பிள்ளையார்; மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு பாணிக்க விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டும் யாவையும் கொடுத்து அருள்பாலித்து வருகிறார்கள்.

இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 31 முதல் செப். 13 வரை சிறப்பாக நடைபெற உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இன்று அருள்மிகு பாணிக்க விநாயகருக்கும், அருள்மிகு உச்சி விநாயகருக்கும் காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் பிரம்மாண்ட கொழுக்கட்டையானது, அருள்மிகு பாணிக்க விநாயகர் சன்னதியில் 75 கிலோ, அருள்மிகு உச்சிவிநாயகர் சன்னதியில் 75 கிலோ என மொத்தம் 150 கிலோ எடையில் நிவேத்தியம் செய்யப்படுகிறது. இந்த கொழுக்கட்டை பச்சரிசி பாவ உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள்ளு, நெய், நேங்காய் ஆகிய பொருள்களைக் கொண்டு திருக்கோயில் படப்பள்ளியில் தயாரிக்கப்பட்டது. மேலும் 2004-ம் ஆண்டு முதல் பெரிய கொழுக்கட்டை தயார் செய்து நிவேந்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.

எனவே, மேற்படி பெரிய கொழுக்கட்டையானது நிவேத்தியம் செய்யப்பட்டு சேவார்த்திகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.  

இன்று தொடங்கி செப். 13 வரை 14 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், உச்சிப்பிள்ளையார் அருள்மிகு மாணிக்க விநாயகர் சன்னதி மூலவருக்கு தினந்தோறும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 6 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவு போன்ற கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அருள்மிகு மாணிக்க விநாயகர் உற்சவர், திருவிழா நாள்களில் மாலை 4 மணிக்கு பாலகணபதி, நாகாபரண கணபதி, வெஷ்பி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமூக அளபதி, மூஷிக கணபதி ராஜபதி மயூர் குபார் காபபஜ்வாதி, ரிஷபாரூடர்காபதி, சிற்றிடத்தி பதி பற்றும் நர்த்தன கணபதி ஆகிய பல்வேறு விஷேச அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்திருவிழா செப்.11 அன்று ஏகதின இலட்சாரிச்சனையுடன் நிறைவுபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com