வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ம் ஆண்டு நேர்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13 ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (டிச.3) காலை செலுத்தப்பட்டது.
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன், 2009-ஆம் ஆண்டு டிச.3-ம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் என 9 பள்ளிச் சிறுவர்களும் ,சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.
நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில்,உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே, இன்று 13 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அமீரகத்தில் இருந்து பாதுகாப்பாக புறப்பட்ட இந்திய கச்சா எண்ணெய்க் கப்பல்!

செஞ்சி அருகே 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல்

மேற்காசிய பதற்றம்: சவூதி, யுஏஇ வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

