
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு: அதிக தகவல் பகிா்ந்தால் ரூ.5,000 பரிசு
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,
பிகார் முன்னாள் முதல்வரும், முதுபெரும் சமூகநீதிப் போராளியும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்துக்கு, திங்கள்கிழமை சிங்கப்பூர் மருத்துவமனையில் நடைபெறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றியடைந்து, அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
லாலுவுக்கு அவரது மகளே சிறுநீரகத்தை தானமாக வழங்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.