ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்! 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மலை மீது காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 

திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் காட்சி

Published On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மலை மீது காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. 

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

மகா தீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர். 

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாள்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்ததால், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். 

பரணி தீபம்: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபம். இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சரியாக 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. 

தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கொப்பரை மலைப் பயணம்: கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. பா்வதராஜ குல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் 5 மணி நேரத்துக்கும் மேலாக கொப்பரையை சுமந்து சென்று மலை மீது வைத்தனா். கொப்பரையுடன் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் நெய் சேகரிக்கும் அகண்டமும் எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த கொப்பறையில் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ முதல் தர நெய், தீபம் எரிய 11 ஆயிரம் மீட்டா் காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழக கோயில்களில் தீபம்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல முக்கிய கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில், பழனி மற்றும் வடபழனி முருகன் கோயில்களில் கொப்பறை தீபம் ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.