கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

கூடு படத்தில் நாயகனாக அறிமுகமாகும் பிக் பாஸ் பிரபலம்!

விஜே கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா நடிக்கும் கூடு திரைப்படம் குறித்து...

vj kadhir

விஜே கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

Updated On :

கூடு என்ற புதிய படத்தில், பிக் பாஸ் பிரபலம் விஜே கதிரவன், நாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ஜோயல் விஜய் இயக்குகிறார்.

மேலும் இந்தப் படத்தில் ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு கார்த்திக் பழனிசாமி ஒளிப்பதிவாளராகவும், நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். மனோஜ் கிருஷ்ணா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் கூடு படத்தின் முதல்பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் கதை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜே கதிரவன் தொகுப்பாளராகப் பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானாவர். இவர் சில குறும்படங்களிலும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் 6 சீசனின் பங்கேற்று, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார். கடைசி வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த இவர், ரூ. 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இந்த நிலையில், விஜே கதிரவன், கூடு என்ற புதிய திரைப்படத்தில் பிரதான வேடத்தில் நடிக்கவுள்ளது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Bigg Boss fame VJ Kathiravan is set to make his debut as a lead actor in a new film titled 'Koodu'. The film is directed by Joel Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.