கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

கடைசி ஒருநாள்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

படம் | AP

Updated On :

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பே ஓவலில் இன்று (நவம்பர் 15) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் விளையாடியது.

டாப் ஆர்டர் சொதப்பல்; 209 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா!

முதலில் விளையாடிய இந்திய அணி 42.1 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ஒரு முறை ரன்கள் குவிக்கத் தவறினர். நான்காவது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிய நிலையில், மீண்டும் ஒரு முறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரோஹித் சர்மா 7 ரன்கள், விராட் கோலி 5 ரன்கள் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் 18 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் படேல் மற்றும் இஷான் கிஷான் தலா 46 ரன்கள் எடுத்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நமன் திர் தலா 22 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேத்யூ ஃபிஷர் இரண்டு விக்கெட்டுகளையும், பிளேர் டிக்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

தொடரை வென்ற இந்திய அணி!

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 187 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, நிக் கெல்லி மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலா 24 ரன்கள் எடுத்தனர். வில் யங் 22 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் 19 ரன்கள், கிறிஸ்டியன் கிளார்க் 16 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் அக்‌ஷர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆகிப் நபி, யஷ் தாக்குர் மற்றும் நமன் திர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Summary

The Indian team won the final ODI against New Zealand by 22 runs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.