கோவையில் கார் வெடிப்பு: மேலும் 3 பேர் கைது!
கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை இன்று கைது செய்தனர்.


கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை இன்று கைது செய்தனர்.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தார்.
முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக கோவை உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன்(23), கோவை ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) மற்றும் அஃப்சா் கான் (27) ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனர்.
கைதான 6 பேரையும் டிசம்பர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் முகமது தவ்ஃபிக், உமர் ஃபரூக், ஃபெரோஸ்கான் என்று தேசிய புலனாய்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...