தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,
மாண்டஸ் புயலின் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வருவதால், கரையைக் கடப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வலுப்பெற்றது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த தாழ்வு மண்டலம் நேற்று மாலையே புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், நகரும் வேகம் குறைந்ததால் புயலாக வலுப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது புயலின் நகரும் வேகமானது மணிக்கு 6 கி.மீட்டராக குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது காரைக்காலுக்கு 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு 620 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


