காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாமக்கல்: சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் பலி!

நாமக்கல் அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜ் பலியானார்.

News image
சாலை விபத்தில் பலியான காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜ்
Updated On :8 டிசம்பர் 2022, 6:05 am

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜ் பலியானார்.

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57). இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

புதன்கிழமை இரவு பணியில் இருந்த அவர் இரவு 11 மணி அளவில், பெரிய மணலி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். இதனை பார்த்த அந்த பகுதியினர் எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்து போனார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடல் கூறாய்வு செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தகவல் அறிந்து அங்கு வந்த உறவினர்கள் ரங்கராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர். 

விபத்தில் இறந்து போன காவல் உதவி ஆய்வாளர் ரங்கராஜுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.