
வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து
அவிநாசி: அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தடுக்க முயன்ற அரசுப் பேருந்து வீட்டின் மீது மோதி புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது.
திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவிநாசி வெள்ளியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அதே திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலை தடுமாறியதால், அவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்து வீட்டின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | காலை 10 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
இதில், அதிர்ஷ்டவசமாக வீட்டில் உள் அறையில் இருந்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி தப்பினர். இருப்பினும் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 4க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஓட்டுநரின் முயற்சியால் சாலையோரம் இருந்த மின் மாற்றி மீது அரசுப் பேருந்து மோதாமல் வீட்டின் மீது மோதியது பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.