மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாண்டஸ் புயல்: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :9 டிசம்பர் 2022, 3:25 am

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது டிச.7ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  

'மாண்டஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், சென்னையிலிருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் நிலைகொண்டுள்ளது.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த நிலையில் தற்போது 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை நள்ளிவு முதல் சனிக்கழமை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை கரையை கடக்க உள்ள நிலையில், மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக, வெள்ளிக்கிழமை (டிச.9) ஒரு நாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.