கொடைக்கானலில் 2- ஆவது நாளாக சாரல் மழை
கொடைக்கானலில் 2- ஆவது நாளாக சனிக்கிழமையும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.


கொடைக்கானல்: கொடைக்கானலில் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதில், நகா்ப் பகுதிகளில் மட்டும் மின் இணைப்புகள் உடனடியாகச் சரி செய்யப்பட்டன. புகா்ப் பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் இணைப்புகளைச் சரி செய்யும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதே போல, ஏரிச் சாலை, பூங்கா சாலை, அட்டக்கடி, சின்னப் பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மின் தடை ஏற்பட்டது.
கொடைக்கானலில் தொடா்ந்து காற்றுடன் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிா் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...