
அம்பாசமுத்திரம்: கடையம் செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தில் பாரதியார் 141ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கடையம் திருவள்ளுவர் கழகத் தலைவர் சேதாராமலிங்கம் தலைமை வகித்து பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தார். செயலர் கல்யாணி சிவகாமிநாதன், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகச் செயலர் மாடசாமி, ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப் பள்ளிச் செயலர் சுந்தரம், கடையம் பாரதி அரிமா சங்க நிர்வாகிகள் முருகன், குமரேசன், இந்திரஜித், கோபால், கடையம் முத்தமிழ் கலா மன்றம் அமைப்பாளர் கலையரசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் மன்னன், பேராசிரியர் கல்யாணராமன், கல்யாண சுந்தரம், ராமானுஜம், பணி நிறைவு வட்டாட்சியர் சின்னச்சாமி, சேவாலயா ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பூதத்தார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.