தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சென்னை, 9 மாவட்டங்களுக்கு இரவு வரை ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணிவரை ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 10:51 am

DIN

சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணிவரை ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால், இரண்டு நாள்களுக்கு (டிச.12, 13) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள மழை கணிப்பில்,

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சு, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.