பகல் 1 வரை சென்னை, 14 மாவட்டங்களில் மழை தொடரும்!
சென்னை, திருவள்ளூர் உள்பட 15 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


சென்னை, திருவள்ளூர் உள்பட 15 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மிதமான மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால், இரண்டு நாள்களுக்கு (டிச.12, 13) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோயம்பத்தூர், திருப்பூர், நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிவரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...