பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

அமைச்சர் உதயநிதியின் முதல் 3 கையெழுத்துகள்!

அமைச்சர் உதயநிதி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Updated On :

அமைச்சர் உதயநிதி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் கோப்பை மாநில கபடி போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கும் கோப்பில் அமைச்சர்  உதயநிதி கையெழுத்திட்டார். மேலும், துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கவும், வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6000 உதவித்தொகை வழங்கவும் அமைச்சர்  உதயநிதி கையெழுத்திட்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார்.

அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்கள் வரிசையில் தங்கம் தென்னரசுவுக்கு அடுத்ததாக 10-வது இடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.