கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க புதன்கிழமை தடை விதிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை உள்ளிட்ட ஓடை பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் சுருளி அருவியின் மற்றொரு நீர்வரத்து பாதையான ஹைவேவிஸ் தூவானம் அணை பகுதியிலும் மழை பொழிவால் உபரி நீர் வெளியேறியது.
இதனால் புதன்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணிப்பு செய்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் செல்லாதவாறு வன ஊழியர்களை பாதுகாப்பிற்காக நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வனச்சரகர் வி.பிச்சைமணி கூறியது, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் புதன்கிழமை குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்த பின் குளிக்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தமிழக வரலாற்றில் முதல்முறை.. வெற்றிகரமாக நீண்ட காலம் தொடரும் கூட்டணி! - முதல்வர் ஸ்டாலின்

ஜெயலலிதாவின் புகழ் பாடும் மோடி! இதுதான் காரணம்! - விளக்கிய முதல்வர் ஸ்டாலின்

OPS காரில் ஸ்டாலின் புகைப்படம், திமுக கொடி!
சதீஷின் முஸ்தபா முஸ்தபா டிரைலர்!
வீடியோக்கள்
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

புலம்பும் தசுன் ஷானகா: இலங்கையின் வரிசையில் அடுத்து பாகிஸ்தான்? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

