சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பால் சென்னை மெரீனாவில் சேதமான மாற்றுத்திறனாளிகள் நடைபாதையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நடைபாதை விரைவில் சீரமைக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கடந்த வார இறுதியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மெரீனாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நடைபாதை சீரமைக்கும் பணி தொடங்கியிருக்கிறது. சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு, நாளையே நடைபாதை திறக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. மெரீனாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
மாண்டஸ் புயல் காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் மெரீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை உடைந்து சேதமடைந்தது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் டிசம்பர் 9ஆம் தேதி இரவு மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கம் பகுதியில் கரையை கடந்தது. இந்நிலையில், சென்னை மெரீனாவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் சமீபத்தில் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை உடைந்து சேதமடைந்தது. இதனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்தனர்.
மரத்தால் ஆன நடைபாதை
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்ட நடைபாதை திறந்து வைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. சீனத்துக்கு என்னதான் பிரச்னை?
இந்தப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டிருந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக பாதையானது கடற்கரை ஓரம் 22 மீட்டா் நீளத்தில், 5 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பறை வசதிகளும், அவா்கள் பயன்படுத்துகின்ற வகையில் சக்கர நாற்காலிகள் வைப்பதற்காக கன்டெய்னா் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.