மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

“மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்”: அமைச்சர் உதயநிதிக்கு இளையராஜா எம்பி வாழ்த்து

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2022, 10:15 am

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவருக்கு இளைஞர் நலன்,  விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், “மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்களே. நீங்கள் பதவியேற்கும் நாளில் உங்களை வாழ்த்துவதில் எனக்கு மகழ்ச்சி தருகிறது. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என்று வள்ளுவர் சொன்னதைப் போல் அம்மாவுக்குதான் நீங்கள் பதவியேற்பது சந்தோஷமாக இருக்கும். இது நிஜமாகும்போது உங்கள் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

அமைச்சர் பதவியை ஏற்கும்போது பொறுப்பு அதிகமாகிறது. இந்த அமைச்சர் பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். அதனை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.