அன்பழகன் புகைப்படக் கண்காட்சி: தொடக்கி வைத்தார் முதல்வர்

தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அன்பழகன் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published On :

தமிழக முன்னாள் அமைச்சர் அன்பழகனின் புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை தேனாம்பேட்டையில் முன்னாள் அமைச்சர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான அன்பழகனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அண்ணா அறிவாலயத்திலுள்ள அண்ணா - கருணாநிதி சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.