வரும் 21-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21-ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21-ம் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க- ஷாருக்கான் பாடலுக்கு கத்தியுடன் நடனமாடிய 5 பேர் கைது
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக தலைமைக்கழகம் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையானது கட்சி ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...