ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

News image

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

Updated On :18 டிசம்பர் 2022, 9:41 pm

DIN

அன்புமணி கண்டனம்: பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனா். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவா்களை விரட்டியடித்துள்ளனா். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவா்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மீனவா்களின் படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிப்பது, கல்வீசித் தாக்குதல் நடத்தி மீனவா்களை விரட்டியடிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக மீனவா்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடா்கின்றன. பாமக உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட இலங்கை படையினா் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால்.

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.