பான் அட்டையை புதுப்பிக்க வேண்டுமா? பான் அட்டை தொலைந்துவிட்டால்? 

ஆதார் அட்டை, பான் அட்டை வாகனம் ஓட்டுபவராக இருந்தால் ஓட்டுநர் உரிமம் என மிக முக்கியமான ஆவணங்களை எப்போதும் நாம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
பான் கார்டு (கோப்புப்படம்)
பான் கார்டு (கோப்புப்படம்)

ஆதார் அட்டை, பான் அட்டை வாகனம் ஓட்டுபவராக இருந்தால் ஓட்டுநர் உரிமம் என மிக முக்கியமான ஆவணங்களை எப்போதும் நாம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

ஒரு வேளை, ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கையில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் டிஜிட்டல் லாக்கர் முறையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

டிஜிட்டல் லாக்கர் முறையைப் பயன்படுத்துவதோடு, ஒவ்வொருவரும் நமது ஆதார் எண் மற்றும் பான் எண்களை மனப்பாடமாக வைத்துக் கொள்வது இன்னும் சிறந்தது.

சரி ஒருவர் பான் அட்டை வாங்கினால் அதனைப் புதுப்பிக்க வேண்டுமா என்று கேட்கலாம். இல்லை. ஒருவருக்கு ஒரு முறைதான் பான் அட்டை வழங்கப்படும். ஒரு வேளை ஏதேனும் தேவைக்காக, அல்லது அந்த பான் அட்டையில் இருக்கும் முகவரியை மாற்றுவதற்காக வேண்டுமானால் பான் அட்டையில் இருக்கும் முகவரியை திருத்தி புதிய அட்டைப் பெற்றுக் கொள்ளலாமே தவிர, ஒரு முறை பான் அட்டை பெற்றுவிட்டால் அதனை புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு வேளை, பான் அட்டை தொலைந்துவிட்டால் அதற்காக பயப்பட வேண்டாம். பான் அட்டை தொலைந்துவிட்டால் புதிய பான் அட்டை பெற்றுக்கொள்ள மத்திய அரசு வழிவகை செய்திருக்கிறது. அதேவேளையில், முறைகேடு ஏதேனும் நடக்கக் கூடாது என்பதற்காக பான் அட்டை தொலைந்துவிட்டால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

ஒரு வேளை பான் அட்டை தொலைந்துவிட்டால்.. நேரடியாக அலுவலகம் சென்று விண்ணப்பிப்பது எப்படி?

பான் அட்டை மையம் அல்லது என்எஸ்டிஎல்-டிஐஎன் சேவை மையத்துக்குச் செல்லுங்கள்.

இதையும் படிக்க.. காத்திருக்கும் அதிர்ச்சி: போன் பே, கூகுள் பே பயனாளர்களுக்கு விரைவில் கட்டுப்பாடு

அங்கு பான் அட்டை தொலைந்துவிட்டதாகக் கூறி, மற்றொரு அட்டைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைக் கேட்டுப் பெறுங்கள்.
அதில் உங்கள் தகவல்களை பதிவு செய்யுங்கள்,  பான் அட்டை காணாமல் போய்விட்டதாகக் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நகல் மற்றும் உங்கள் புகைப்படத்தை இணையுங்கள்.
உங்கள் இருப்பிடத்துக்கே வந்து சேரும் வகையில் பான் அட்டையை பெற இடத்துக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
அந்தக் கட்டணத்துக்கான டிடியுடன் சீலிட்ட உறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சேவை மையத்தில் அளியுங்கள். அஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க..
டிஐஎன்-என்எஸ்டிஎல் இணையதளமான protean இணையதளத்துக்குச் செல்லவும். (https://www.protean-tinpan.com/)
சேவை என்பதில் பான் என்ற வாய்ப்பைக் கிளிக் செய்யவும்.
ரீபிரிண்ட் ஆஃப் பான் அட்டை என்பதை தேர்வு செய்யவும்.
அங்கு இருக்கும் விவரங்களை சரியாக படித்துவிட்டு, தேவையான ஆவணங்களை தயார் செய்யவும்.
பிறகு இங்கே என்று இருக்கும் இணைப்பை சொடுக்கவும்.
அங்கே உங்கள் பான் அட்டை, ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரியாக பதிவிடவும்.
சப்மிட் செய்ததும் டோக்கன் எண் வழங்கப்படும். அதனை குறித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு கன்டின்யூ வித் பான் அப்ளிகேஷன் பார்ம் என்பதை சொடுக்கவும்.
பிறகு பர்சனல் டீடெயில் என்று வரும். அதனை தேர்வு செய்யும்.
அதில் மூன்று  வாயப்புகள் இருக்கும்.
1. எண்ம (டிஜிட்டல்) முறையில் இ- கையெழுத்து மற்றும் இ-கேஒய்சி யை சமர்ப்பிக்க.
2. ஸ்கேன் செய்த புகைப்படமாக இ-கையெழுத்தை சமர்ப்பிக்க.
3. நேரடியாக கையெழுத்திட்டு ஆவணங்களை சமர்ப்பிக்க

இதில் உங்களுக்கு ஏற்ற வாய்ப்பை பதிவு செய்யவும்.
பிறகு உங்கள் தகவல்களை அளித்து சப்மிட் செய்யவும்.
பிறகு டாக்குமெண்ட் டீடெயில் பிரிவுக்குச் செல்லவும்.

ஆவணங்கள்
ஆதார் அட்டையை டிஜிட்டல் முறையில் இணைக்க வேண்டும்.
பிறகு அனைத்து விவரங்களும் உண்மைதான் என்பதை உறுதி செய்து உங்கள் பெயர், இடம், தேதியை பதிவு செய்ய வேண்டும்.
பிறகு அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு சப்மிட் கொடுக்கவும்.
பிறகு பேமெண்ட் பக்கம் வரும். அதில் குறிப்பிட்ட கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும். பிறகு 15 இலக்க எண் கிடைக்கும். இந்த எண்ணைக் கொண்டு உங்கள் பான் அட்டையின் நிலவரத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உங்களுக்கு புதிய பான் அட்டை கிடைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com