2022-ல் திரையரங்குகளில் 863 டன் பாப்கார்ன், 20 லட்சம் சமோசா விற்பனை

திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன், திரையரங்கில் விற்பனை செய்யப்படும் தின்பண்ட உணவு வகைகளுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

2022ஆம் ஆண்டில் திரையரங்குகளில் 863 டன் பார்கார்ன் மற்றும் 20 லட்சம் சமோசாக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐநாக்ஸ் திரையரங்க நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஐநாக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக 74 நகரங்களில் உள்ள 167 திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்ட உணவுகளின் அளவை முதல்முறையாக அந்நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. 

திரையரங்குகளில் திரைப்படம் பார்க்கும் அனுபவத்துடன், திரையரங்கில் விற்பனை செய்யப்படும் தின்பண்ட உணவு வகைகளுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டு தங்கள் திரையரங்குகளில் விற்பனை செய்யப்பட்ட  உணவுகளின் பட்டியலை ஐநாக்ஸ் நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

1. அதில், 2022ஆம் ஆண்டில் மட்டும் 863 டன் பாப்கார்ன் விற்பனையாகியுள்ளது. இதில் 7.88 மெட்ரிக் டன் பார்கார்ன் மும்பையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைசூரு, நாக்பூர், காஸியாபாத், கான்பூர், நாசிக், கோஹல்பூர் ஆகிய நகரங்களைக் காட்டிலும் மும்பையில் பார்பார்ன் ருசிப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். 

2. இந்த ஆண்டில் 19.38 லட்சம் சமோசாக்கள் விற்பனையாகியுள்ளன. 10.7 சதவிகித சமோசா சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 3 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டவை. 

3. திரையரங்குகளில் எண்ணெயின் பொறித்த உணவுகள் முக்கிய அங்கமாக மாறியுள்ளன. அந்தவகையில் 82 டன் பொறித்த துரித உணவுகள் விற்பனையாகியுள்ளன. 

4. சென்னை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் பப்ஸ் அதிக அளவில் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 3,38,859 பப்ஸ்கள் விற்பனையான நிலையில், அதில் 55 சதவிகிதம் சென்னை, மதுரை, சேலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

5. இதேபோன்று 38.15 லட்சம் லிட்டர் குளிர்பானங்கள், 20.28 லட்சம் லிட்டர் சூடான பானங்கள் (தேநீர், காபி, சூப் வகைகள்) விற்பனையாகியுள்ளன. 

6. சென்னையில் மட்டும் 75 சதவிகித டோனட்களும், மதுரையில் 26 சதவிகித ஐஸ்கிரீம்களும் விற்பனையாகியுள்ளன.

7. இதைத் தவிர்த்து அதிக அளவில் சீன உணவுகளும் திரையரங்குகளில் விற்பனையாகியுள்ளன. அவற்றில் டிம்-சம்ஸ், நூடூல்ஸ், மோமோ போன்றவை அதிக அளவில் மக்களால் விரும்பி வாங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com