கிறிஸ்துமஸ் பண்டிகை: சென்னையிலிருந்து 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்குச் செல்ல 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்தவ மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமையில் வருவதாலும் அடுத்து புத்தாண்டு உள்ளிட்ட தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.
இதனால் பெரும்பாலான அரசு, தனியார் பேருந்துகளில் முன்பதிவுகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தேவையைப் பொருத்து பிற வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...