குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்களை சேர்க்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. 

மொத்தம் 7,382 பணியிடங்களை நிரப்பும் வகையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. குரூப்-4 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். 

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு, 6 மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாதது தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், முன்னதாக 7,301 காலி பணியிடங்கள் இருந்த நிலையில், தற்போது குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்படுள்ள நிலையில், காலி பணியிடங்கள் மொத்தம் 9,870 ஆக உயர்ந்துள்ளது. 

குரூப்-4 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கான முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com