இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

விவசாயிகளிடம் இருந்துதான் கரும்பு கொள்முதல் செய்யப்படும்: அமைச்சர் தகவல்

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்துதான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

News image
Updated On :29 டிசம்பர் 2022, 12:07 pm

DIN

பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்துதான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

வருகிற ஜன.15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகையுடன் ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை வழங்கப்படும் என சமீபத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இருப்பினும் தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படவுள்ள இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 முதல் 8 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல்வர் இதனை தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கு விவசாயிகளிடம் இருந்துதான் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்றும் இடைத்தரகர்கள் இன்றி மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கூட்டுறவு, வேளாண்மை அதிகாரிகள் கொள்முதல் செய்வார்கள் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.