பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 
பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்!

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.

இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டம் நடத்தும் ஆசிரியர்களின் குழுவினருடன் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதன்படி, ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com