சென்னை: திருப்புகழ் திருப்படி பூஜை விழாவையொட்டி திருத்தணிக்கு சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் - திருத்தணி (பிஎஸ் 1, பிஎஸ் 2) சிறப்பு ரயில் டிசம்பர் 31ம் தேதி இரவு 11.10-க்கு புறப்பட்டுச் செல்லும் எனவும் அரக்கோணம் - திருத்தணி சிறப்பு ரயில் (பிஎஸ் 3, பிஎஸ் 4) ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவு 12.05 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அறுபடைவீடுகளில் ஐந்தாம் படைவீடான திருத்தணி முருகன் கோயிலில், திருப்புகழ் திருப்படித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிக்க.. முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை: குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
ஏராளமான பஜனை குழுவினர் ஒவ்வொரு படியிலும், பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோயிலுக்குச் சென்று முருகப் பெருமான வழிபடுவார்கள். பக்தர்களும் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றியவாறு மலைக்கோயிலுக்குச் செல்வார்கள்.
அந்த வகையில், திருத்தணி முருகன் கோயிலில் வரும் டிசம்பா் 31-இல் திருப்புகழ் திருப்படி திருவிழாவும், ஜனவரி 1-இல் புத்தாண்டு சிறப்பு தரிசனமும் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கா்நாடாக, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனா். இக்கோயிலில் முக்கிய விழாவாக ஓா் ஆண்டைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள 365 திருப்படிகளுக்கு மலா்கள் வைத்து, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து பக்தா்கள் பூஜைகள் செய்து முருகப் பெருமானை வழிபடும் விழா திருப்புகழ் திருப்படி திருவிழாவாகும்.
நிகழாண்டிற்கான திருவிழா வரும் 31- ஆம் தேதி காலை 8 மணிக்கு சரவணப் பொய்கையில் தொடங்குகிறது. காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி மலைக்கோயில் மாடவீதிகளில் ஒருமுறை வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். மாலை 4 மணி முதல் ஜனவரி 1-ஆ ம் தேதி இரவு 9 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். இந்த நேரத்தில் பக்தா்கள் தொடா்ந்து கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் 31-ஆ ம் தேதி காலை 11 மணி முதல் மலைக்கோயில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் உதவி ஆணையா் விஜயா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னேற்றம் தரும் மூன்று சக்கரத்தாழ்வார் தரிசனம்!

தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!

கொல்கத்தா வந்தார் அமித் ஷா! மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் யார்? இன்று வெளியாகும் அறிவிப்பு!
காங்கிரஸ் கூட்டணி முறிவு: நாடாளுமன்றத்தில் இருக்கைகளை மாற்றித்தரக் கோரிய கனிமொழி!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

