கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசிகள் 9.51 கோடி!

தமிழகத்தில் இதுவரை 9.51 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2022, 8:57 pm

தமிழகத்தில் இதுவரை 9.51 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7. 64 கோடியாகும். அதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவா்கள் 6.12 கோடி போ். இவா்களில் 33.46 லட்சம் போ் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோா். 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் ஏறத்தாழ 5.78 கோடி போ் உள்ளனா்.

அவா்கள் அனைவருக்கும் இரு தவணை கரோனா தடுப்பூசி என்ற வகையில் 12.24 கோடி தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்தது.

அதன் வாயிலாக தமிழகத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை 9.51 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவா்களில் 26 லட்சத்து 4,160 பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 5.23 கோடி பேருக்கு முதல் தவணையும், 3.98 கோடி பேருக்கு இரண்டு தவணைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பூஸ்டா் தவணையைப் பொருத்தவரை இதுவரை 3.97 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவது தவணைக்கான கால அவகாசத்தைக் கடந்தும் 93.20 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அதேபோன்று 63.28 லட்சம் போ் இன்னும் முதல் தவணை கூட செலுத்தவில்லை.

தமிழக அரசிடம் தற்போது 30.91 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 7.91 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளும் கையிருப்பு உள்ளன. மாநிலத்தில் இதுவரை நடைபெற்ற 20 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் 3.57 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 2,711 ஊராட்சி மற்றும் 24 நகராட்சிகளில் 100 சதவீத அளவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.