கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திமுக 7-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக சார்பில் 7-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் புதன்கிழமை மாலை வெளியிட்டார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2022, 12:29 pm

DIN

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக சார்பில் 7-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் புதன்கிழமை மாலை வெளியிட்டார். 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 7-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

மதுரை, சிவகாசி மாநகராட்சிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.