மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது: ராகுல் காந்திக்கு கே.எஸ்.அழகிரி நன்றி

தான் ஒரு தமிழன் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:19 am

DIN

தான் ஒரு தமிழன் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆற்றிய உரை, மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்ற கருத்தை வலியுறுத்தியதோடு, பாரதிய ஜனதா கட்சி தனது வாழ்நாளில் தமிழகத்தை ஆள முடியாது என்று ஆவேசமாக பேசியிருக்கிறார். மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்திக் கூறியிருக்கிறார். இதன்மூலம் கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். இக்கருத்தை கூறியதற்காக தி.மு. கழக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வரவேற்று டிவிட்டரில் கருத்து கூறியிருக்கிறார்.

மக்களவையில் ராகுல்காந்தி தமிழகத்தைப் பற்றி குறிப்பிட்டு பேசியது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு நான் ஒரு தமிழன் என்று பதில் கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பன்முக கலாச்சாரத்தை மதிப்பதோடு, வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற வகையில், தலைவர் ராகுல்காந்தி இத்தகைய கருத்தை மக்களவையில் மிகுந்த எழுச்சியோடு கூறியதை குறிப்பிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து வரவேற்றிருக்கிறார். தேசிய அளவில், தலைவர் ராகுல்காந்தி கூறிய கருத்துக்கு, தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக இருக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது நன்றியை வெளிப்படுத்தியிருப்பது மதச்சார்பற்ற சக்திகளுக்கு மிகுந்த வலிமையை வழங்கும் என்பதை உறுதியோடு கூற விரும்புகிறேன்.

தமிழக மக்கள் பெருமைப்படுகிற வகையில் மக்களவையில் உரையாற்றிய தலைவர் ராகுல்காந்தியையும், அந்த உரைக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் பாராட்டி பெருமைப்படுவதோடு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.