நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப அனுப்பியதைத் தொடர்ந்து ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறித்தி தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியிறுத்தி வந்தனர். அதனைத் கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க | கேரள அரசிற்குத் தன் நிலத்தை இலவசமாகக் கொடுத்த அடூர் கோபாலகிருஷ்ணன்
பின் அந்த மசோதா ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது ஆளுநர் ஆர்.என் ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பியுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் வியாழக்கிழமை முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை மத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனால் அவையில் சிறிதுநேரம் அமளி நிலவியது.
தொடர்ந்து திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தருமபுரியில் சௌமியா அன்புமணி வேட்புமனு தாக்கல்!

22 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் விஜய் பிரசாரம்: செங்கோட்டையன்

சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரம்!

ஏப். 15ல் குமரியில் பிரதமருடன் பிரசாரம்; 210 தொகுதிகளில் வெல்வோம்: இபிஎஸ் பேட்டி
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


