2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மேட்டுப்பாளையம்: 85 வயது மூதாட்டியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அலி என்பவர், 85 வயது மூதாட்டியான தனது தாயாருடன் வந்து வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

News image
மேட்டுப்பாளையம் நகராட்சியில் தனது தாயார் பாத்திமா பீவியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர் முகமது அலி.
Updated On :4 பிப்ரவரி 2022, 6:39 am

DIN

மேட்டுப்பாளையம் நகராட்சியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் முகமது அலி என்பவர், 85 வயது மூதாட்டியான தனது தாயாருடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 28 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்குள்பட்ட 19வது வார்டு உறுப்பினர் முகமது அலி (சுயேச்சை ) இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவரது வேட்பு மனுவை முன்மொழிய தனது 85 வயது தாயாரான பாத்திமா பீவியுடன்வந்திருந்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.