நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆலோசிக்க தமிழக அரசியல் கட்சிகளின் அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | நடிகர் விஜயுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பு
கடந்த 5 மாதங்களாக இந்த மசோதா மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாகக் குறிப்பிட்டு மாநில அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பினார்.
இதற்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் திரையரங்குகள் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதி
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக நாளை (பிப்.5) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்கப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நாளை முக்கிய முடிவு எட்டப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


