ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீட் விலக்கிற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு: ஓ. பன்னீர்செல்வம்

நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

News image
நீட் விலக்கிற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு: ஓ. பன்னீர்செல்வம்
Updated On :5 பிப்ரவரி 2022, 7:09 am

DIN


சென்னை: நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் தேர்வு ரத்து குறித்து ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையிலும், அதிமுக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. நீட் விலக்கிற்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.