புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

100 நாள் வேலை: மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். 

News image
100 நாள் வேலை கேட்டு மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பெண்கள்
Updated On :14 பிப்ரவரி 2022, 11:42 am

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டனர். 

மானாமதுரை ஒன்றியத்தைச் சேர்ந்த ஆவரங்காடு   கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் இந்த வேலைக்கு வரும் பயனாளிகளை காலையில் வழக்கமாக பணிக்கு வரும் நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டுமென வற்புறுத்துவதாகவும் புகார் கூறி ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அதன் பின் இவர்கள்  வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னர் இந்த பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.